நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்திற்கு எதிரான நாசவேலைகள் நாட்டை பலவீனப்படுத்துடன் அமைதியின்மையை உருவாக்கும்: குணராஜ் 

கிள்ளான்:

அரசாங்கத்திற்கு எதிரான நாசவேலைகள் நாட்டை பலவீனப்படுத்துடன் அமைதியின்மையை உருவாக்கும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை வலியுறுத்தினார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் பல முக்கியமான சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. இது ஒரு நாள் வேலை அல்ல.

தவறான நிர்வாகம், ஊழல், பழைய அதிகாரத்தின் ஆணவம் காரணமாக நீண்ட காலமாக சேதமடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை தொடர்கிறது.

குறிப்பாக வாழ்க்கைச் செலவால் மக்கள் தொடர்ந்து அழுத்தப்படாமல் இருக்க பொருளாதார மறுசீரமைப்பு நடந்து வருகிறது.

மானியங்கள் நியாயமான முறையில் இலக்காகக் கொள்ளப்படுகின்றன. பணக்காரர்களுக்கு அல்லாமல் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு அது பயனளிக்க வேண்டும்.

நிர்வாக அமைப்பை சுத்தம் செய்வதுடன் அந்நிய நாட்டு முதலீடு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இது நாட்டின் தலைமையின் மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையின் சான்றாகும்.

கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பத்திற்கான நீண்ட கால திட்டங்கள் வெற்று வாக்குறுதிகள் நின்று விடாமல் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளும் தொடர்கின்றன.

இப்படி நாடு, மக்களின் நலனை அடிப்படையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை யாரும் கெடுக்க வேண்டாம்.

மேலும் நாட்டிற்கு தலைமை தாங்க உண்மையில் தகுதி உள்ள கட்சிகள் துணிச்சலுடனும் மரியாதையுடனும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம்.

இது ஜனநாயகத்தில் ஒரு நியாயமான களம். மாறாக  வெளியில் இருந்து நாசவேலை செய்ய வேண்டாம்.

அதே வேளையில் நாட்டை பலவீனப்படுத்தும் அமைதியின்மையை உருவாக்க வேண்டாம்.

இப்போது நமக்குத் தேவை பொறுமை, நிலைத்தன்மை.  ஆதரவாகும். கட்டமைப்புகள் நடந்து வருகிறது. அதன் முடிவுக்காக நாம் காத்திருக்கிறோம்.

அதிகார பேராசை காரணமாக, கட்டப்பட்டு வரும் தளத்தை அழிக்க வேண்டாம். இது அனைவருக்கும் பேராபத்தை தரும் என்று  குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset