நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2.8 மில்லியன் பேர் MyDigital ID-யில் பதிவு செய்துள்ளனர்: ஜலிஹா முஸ்தாஃபா 

கோலாலம்பூர்:

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 2.8 மில்லியன் பேர் MyDigital ID-யில் பதிவு செய்துள்ளனர் என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.

முதல் காலாண்டில் 1.8 மில்லியன் பேர் MyDigital ID-யில் பதிவு செய்திருந்த நிலையில் இரண்டாவது காலாண்டில் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

பதிவு எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுவதையும் ஜலிஹா ஒப்புக் கொண்டார்.

இந்தச் செயலி சிம் கார்டுகளை வாங்கும் போது அடையாள சரிபார்ப்புக்காகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்று ஜலிஹா குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset