நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசுக் கொள்கைகள் மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் அன்வார் உறுதி:  ஃபஹ்மி ஃபாட்சில் 

புத்ரா ஜெயா:

அரசாங்கத்தின் கொள்கைகள் யாவும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருப்பதைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி செய்வதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் கொள்கைகள் பெரும்பான்மை மக்களின் நலனைப் பாதிக்கும் வண்ணம் இருக்க கூடாது என்று பிரதமர் கூறியதை ஃபஹ்மி சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகை யாருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசு இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும் இது இவ்வாண்டின் ஜூலை மாதத்திற்கு பின் அறிவிக்கப்படலாம் என்றும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் அன்வார் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதித்ததாகவும் இந்நடவடிக்கை மீது எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்ததை ஃபஹ்மி வெளிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset