நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திட்டமிட்ட அமலாக்க நடவடிக்கைகளைப் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்தும்: ஃபஹ்மி ஃபாட்சில்

கோலாலம்பூர்:

நாட்டில் பேருந்து ஓட்டுநர்களின் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வது உட்பட, மேலும் திட்டமிட்ட அமலாக்க நடவடிக்கைகளைப் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர், டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

இந்த முழுமையான அமலாக்க நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.

பேருந்து ஓட்டுநர்களின் பாதுகாப்பு அம்சத்தையும் போக்குவரத்து அமைச்சு கருத்தில் கொள்வதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை, உப்சி மாணவர்களை உட்படுத்திய பேருந்து விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கயின் முடிவுகள் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset