நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பார்சிலோனா ராஸ்போர்ட்டிற்கு வார சம்பளமாக 1.85 மில்லியன் ரிங்கிட்டை வழங்குகிறது

மாட்ரிட்:

பார்சிலோனா ராஸ்போர்ட்டிற்கு வார சம்பளமாக 1.85 மில்லியன் ரிங்கிட்டை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட், பார்சிலோனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பிறகு, மார்கஸ் ராஸ்போர்டின் பார்சிலோனாவிற்கு மாறும் நனவாகவுள்ளது.

பார்சிலோனா,  மென்செஸ்டர் யுனைடெட் ராஸ்போர்ட்டை வாங்கும் விருப்பத்துடன் கடன் வடிவில் ஏலத்தை சமர்ப்பித்துள்ளது.

இந்த விதிமுறைகளுக்கு மென்செஸ்டர் யுனைடெட் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் மூலம் அவரை லா லீகாவிற்கு அழைத்து வருவதற்காக பார்சிலோனா அவரது வாரத்திற்கு 325,000 யூரோ சம்பளத்தில் 100 சதவீதத்தையும் செலுத்துவார்கள்.

இந்த ஒப்பந்தம் கிளப்பிற்கு சுமார் 85 மில்லியன் ரிங்கிட் ஊதியத்தை மிச்சப்படுத்தும்.

மேலும் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ரூபன் அமோரிமின் ரெட் டெவில்ஸ் மறுசீரமைப்பிற்கு இது முக்கியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset