
செய்திகள் வணிகம்
சிங்கப்பூரின் நிதிச் சேவைத் துறை 2024ஆம் ஆண்டு 6.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது: துணைப் பிரதமர் கான் கிம் யோங்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் நிதிச் சேவைத் துறை 2024ஆம் ஆண்டு 6.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. 2023இல் அந்த வளர்ச்சி 3.1 விழுக்காடாக இருந்தது. அது சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 விழுக்காடு என்று துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத் தலைவருமான கான் கிம் யோங் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான தொழில்துறை உருமாற்றத் திட்டத்தின் இலக்குபடி நிதித் துறையில் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 3,000லிருந்து 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இலக்கு.
சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 விழுக்காடு என்று துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத் தலைவருமான திரு கான் கிம் யோங் கூறினார்.
சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 விழுக்காடு என்று துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத் தலைவருமான திரு கான் கிம் யோங் கூறினார்.
கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டுவரை சராசரியாக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 4,400. அவற்றுள் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களில் உள்ளூர் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
அனைத்துலக நிதிச் சந்தைகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டதை அடுத்து சிங்கப்பூர் நாணய ஆணையம் முதலீட்டு வருமானத்தால் கூடுதல் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி முடிந்த நிதியாண்டில் சிங்கப்பூர் நாணய ஆணையம் $19.7 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியதாக ஜூலை 15ஆம் தேதி தெரிவித்தது.
அதற்கு முந்தைய ஆண்டில் ஈட்டிய $3.8 பில்லியன் நிகர லாபத்தைவிட அது பன்மடங்கு அதிகம்.
ஆணையம் நிர்வகிக்கும் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பெறப்பட்ட $31.4 பில்லியன் முதலீட்டு லாபங்கள் மூலம் $19.7 பில்லியன் நிகர லாபம் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முடிந்த நிதியாண்டில் சிங்கப்பூர் நாணய ஆணையம் $12.7 பில்லியன் முதலீட்டு லாபத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டது.
அனைத்துலக வளர்ச்சி, மிதமான பணவீக்கம் ஆகியவற்றுக்கு இடையே உலகச் சந்தைகள் பொதுவாக சிறப்பாக செயல்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வருடாந்திர முதலீட்டு வருமானம் $14.8 பில்லியன் என்றார் திரு சியா.
2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிறைவடைந்த நிதியாண்டில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அரசாங்கத்துக்கு $26 பில்லியனை மாற்றிவிட்டது.
நிச்சயமற்ற உலகச் சூழலுக்கு இடையிலும் சிங்கப்பூரின் நிதிச் சந்தைகள் தொடர்ந்து சீராக இயங்குவதாக திரு சியா தெரிவித்தார்.
உள்நாட்டு வட்டி விகிதமும் குறைந்து வருகின்றன.
சிங்கப்பூரின் நிதிச் சேவைத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 2023ஆம் ஆண்டைவிட 2024ஆம் ஆண்டு இரட்டிப்பானது.
இருப்பினும், நிச்சயமற்ற வரி விதிப்புகளால் மெதுவடையும் அனைத்துலக வளர்ச்சியால் கடந்த ஆண்டுகளின் வளர்ச்சி நீடிப்பது சந்தேகம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் எச்சரித்தது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm
சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவும்
August 5, 2025, 10:39 am