நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய அரசியல் நீரோடையில் மஇகாவின் முடிவுகள் குறித்து மத்திய செயலவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

தேசிய அரசியல் நீரோடையில் மஇகாவின் அடுத்தக்கட்ட முடிவுகள் குறித்து மத்திய செயலவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக தற்போதைய அரசியலில் பல்வேறான சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஆக தேசிய அரசியல் நீரோடையில் மஇகா என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

மேலும் 13ஆவது மலேசிய திட்டத்திற்கு பல பரிந்துரைகளை மஇகா வழங்கியுள்ளது.

இந்திய சமுதாயத்தின் நலனை அடிப்படையாக கொண்டே இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரைகளை பிரதமர் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை பிரதமர் என மஇகா நம்புகிறது.

அதே வேளையில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே வன்முறை, தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது. மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துவது குறித்தும் பேசப்பட்டது.

மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset