நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஜாம்பியா அனைத்துலக முதலீட்டு மாநாட்டின் வாயிலாக 2 மலேசிய நிறுவனங்கள் ஜாம்பியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

லுசாகா:

ஜாம்பியா அனைத்துலக முதலீட்டு மாநாட்டின் வாயிலாக 2 மலேசிய நிறுவனங்கள் ஜாம்பியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஜாம்பியா அனைத்துலக முதலீட்டு மாநாடு லுசாகாவில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் ஆறு மலேசிய நிறுவனங்களைச் சேர்ந்த 15 பிரதிநிதிகள் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது.

மலேசியாவில் உள்ள ஜாம்பியா தூதரகம், மாட்ரேட் ஆகியவற்றின் ஆதரவுடன் மலேசிய பேராளர்களின் பங்கேற்பை My Events International ஏற்பாடு செய்திருந்தது.

அதே வேளையில் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள், சர்வதேச முதலீட்டாளர்கள், தொழில் தலைவர்கள்,  மேம்பாட்டு  ஆதரவாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,000 பிரதிநிதிகள் இம் மாநாட்டில் ஒன்றிணைந்துள்ளனர்.

ஜாம்பியா மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் ஆல்பர்ட் ஹல்வாம்பாவின் வரவேற்பு கருத்துகளுடன் மாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

ஜாம்பியாவில் சுரங்கம், விவசாயம், உள்கட்டமைப்பு, எரிசக்தித் துறைகளில் முக்கிய மைல்கற்கள் வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.

மேலும் ஜாம்பியாவின் பொருளாதாரத்தை மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையும் உள்ளது என ஜாம்பியா குடியரசின் தலைவர் ஹகைண்டே ஹிச்சிலேமா கூறினார்.

உலகளாவிய முதலீட்டு மையமாக மாறுவதற்கான ஜாம்பியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதே வேளையில் வலுவான அனைத்துகம தரநிலைகள்,  கூட்டாண்மைகள் மூலம் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் கனிமங்களில் உலகளாவிய ஒற்றுமைக்கு வித்திடும்.

இதனிடையே இம்மாநாட்டின் வாயிலாக  2 மலேசிய நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டன.

இதற்கு ஜாம்பியா வர்த்தக, தொழில்துறை அமைச்சின் தலைவர், மலேசியாவுக்கான ஜாம்பியாவின் தூதர், ஹராரேவில் உள்ள மலேசிய தூதரகத்தின் பொறுப்பாளர் ஆகியோர் முன்னிலையில் இது ஒப்பந்தமானது.

மலேசியாவைச் சேர்ந்த Grusson,  Umoyo Natural Health ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலாக ஒப்பந்தம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாகும்.

மேலும் IB Tech Line Sdn Bhd,  iSanitize ஆகிய நிறுவங்களுக்கு இடையிலாக ஈராண்டு ஒப்பந்தம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கொண்டதாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset