நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகின் மூத்த மொழியான தமிழின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம் மக்களின் சேவை  அளப்பறியது: டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர்

கோலாலம்பூர்: 

உலகின் மூத்த மொழியான தமிழின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம் மக்களின் சேவை  அளப்பறியது. உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை கூறினார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை இன்று தொடங்கப்பட்டது.

மேலும் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் தலைவர் சிங்கப்பூர் முஸ்தபா 5 லட்சம் ரிங்கிட்டை இந்த இருக்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நிதி மாணவர்கள் குறிப்பாக இந்திய ஆய்வியல் துறை மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

அதே வேளையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயனளிக்கும் இதுபோன்ற உதவிகளை உயர் கல்வியமைச்சு வரவேற்கிறது.

உலகின் மூத்த மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. இந்த மொழியின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அளப்பரியதாக உள்ளது.

குறிப்பாக டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக இருநத போது அவருடன் இணைந்து தமிழ் நாட்டிற்கு சென்றிருந்தேன்.

அப்போது தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர், இப்போதைய முதலமைச்சரையும் சந்தித்தோம்.

அப்போது தமிழ் மொழியில் வரலாறு உட்பட அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

மேலும் தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களும் இந்திய முஸ்லிம்களும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பாடுப்பட்டு வருவதை எங்களுக்கு தெரிய வந்தது.

அவ்வகையில் தமிழின் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆய்வு இருக்கை மலாயா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று டத்தோஸ்ரீ ஜம்ரி கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset