நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

படகில் நடனமாடி கவனம் பெற்ற 11 வயது சிறுவன் இந்தோனேசியாவின் ரியாவ் மாவட்டத்தின் சுற்றுலாத் தூதராக நியமனம்

 ரியாவ்: 

படகில் நடனமாடி கவனம்பெற்ற 11 வயது சிறுவன் ரியாவ் மாவட்டத்தின் சுற்றுலாத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள Rayyan Arkan Dikha என்ற சிறுவனுக்கு அம்மாவட்ட ஆளுநர் உதவித் தொகையாக $1,200 டாலர்கள் வழங்கினார். 

தான் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பதாகவும் ஒருபோதும் ஆளுநரை நேரில் சந்திப்பேன் என நினைக்கவே இல்லை என்றும் Rayyan Arkan Dikha தெரிவித்தார். 

முன்னதாக, இந்தோனேசியவின் ரியாவ் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய படகுப் பந்தயத்தில் படகின் முன்பு அமர்ந்து சிறுவன் Rayyan Arkan Dikha சிரமமின்றி நடனமாடும் காணொலி சமூக ஊடகத்திலும்  இணையத்தளத்திலும் வைரலானது.

மற்ற சிறுவர்களும் Rayyan Arkan Dikha போல் தங்களின் பாரம்பரியத்தைத்  தொடர வேண்டும் என்று அம்மாவட்ட ஆளுநர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset