நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்

கோலாலம்பூர்:

ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினரை போலிசார் கைது செய்துள்ளனர்.

பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட துணை போலிஸ் தலைவர் அகமது ஃபிர்டாவ்ஸ் முஸ்தபா கமால் இதனை கூறினார்.

இங்குள்ள பங்சாரில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் கடுமையான சண்டை நடந்தது.

மாலை 4.53 மணிக்கு தனது துறைக்கு சண்டை குறித்த தகவல் போலிஸ்க்கு கிடைத்தது.

சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற ஒரு போலிஸ் அதிகாரிகள்,

சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 24 முதல் 37 வயதுடைய ஒன்பது வெளிநாட்டு ஆண்களைக் கைது செய்தனர்.

சண்டையின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மொத்தம் ஆறு பாதுகாப்பு தலைக்கவசங்கள்,  மூன்று இரும்பு கம்பிகள் போலிசாரால் கைப்பற்றப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

 

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset