நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது

பட்டர்வொர்த்:

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடக்கவுள்ள சமய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமியின் கடப்பிதழ் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதிமுதல் 8ஆம் தேதி வரை அவர் தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவரின் வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் இதனை தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வெள்ளக்கோவிலில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சியில் திரு ராமசாமி தம் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அவர் தமது கடப்பிதழை ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை 8 மணிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஷம்ஷேர் கூறினார்.

முன்னதாக பயணம் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விதித்துள்ள தடையை அகற்றக் கோரி ராமசாமி விண்ணப்பம் செய்திருந்தார்.

அத்தடையைத் தான் விதிக்கவில்லை என்பதால் அதனைத் தன்னால் அகற்ற முடியாது என்று அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸுல்ஹஸ்மி அப்துல்லா தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset