
செய்திகள் இந்தியா
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
புது டெல்லி:
யேமனில் கொலை வழக்கில் நாளை புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவை மீட்க இயலவில்லை என்று இந்தியா கைவிரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்; இனி எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துவிட்டது.
நிமிஷா பிரியாவை அங்குள்ள மருத்துவர் தலால் அப்து மஹதி என்பவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2017இல் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட நிமிஷாவுக்கு வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
நிமிஷாவின் குடும்பத்தினர், அனுதாபத்தின் மூலம் திரட்டப்பட்ட 10 லட்சம் டாலரை மரண இழப்பீடாக உயரிழந்தவரின் குடுத்தினருக்கு வழங்க முயற்சித்து வருகின்றனர்.
அவரை காப்பாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, யேமன் தற்போது ஹவூதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்திய அரசு ராஜ்ஜீய ரீதியில் செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அந்த வரம்பை நாங்கள் எட்டிவிட்டோம்' என்றார் இந்திய அதிகாரி .
நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற, கேரளத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am
உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm