நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை வெளியிட உத்தரவு தள்ளுபடி

புது டெல்லி:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனிப்பட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியிட வேண்டியதில்லை என்று தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

தில்லி பல்கலைக்கழகத்தில் 1978 ஆண்டில் பிஏ பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிரதமர் மோடி உள்ளிட்டவர்களின் தகவல்களைக் கோரி மத்திய தகவல் ஆணையத்திடம் நீரஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்தத் தகவல்களை அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset