நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்

புது டெல்லி:

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால் தேக்கமடைந்துள்ள பொருள்களை வேறுநாடுகளுக்கு விற்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்திய திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அவசர அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தினார்.

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஓசியானியா கண்டம் ஆகியவை உலகளாவிய ஜவுளி மற்றும் ஆடைக்கான தேவையில் நான்கில் மூன்று பங்கை கொண்டிருப்பதால் அவற்றை அணுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரசாயனம், நவரத்தினங்கள், நகை உற்பத்தி, தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒன்றிய வர்த்தக அமைச்சகம் விரைவில் ஆலோசிக்க உள்ளது.  

2022 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிடம் இருந்து அதிக மதிப்பாலான பொருள்களை இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset