நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி அமலாகியது

புது டெல்லி:

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலாகியது. இதன் மூலம் மொத்தம் 50 சதவீத வரியுடன் இந்திய பொருள்கள் அமெரிக்காவில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலடியாக இந்த கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும்.  ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், இறால், கம்பளங்கள், பர்னிச்சர் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 60.2 பில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் மொத்தம் 43 சதவீத சரிவு ஏற்படும். குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்பும் ஏற்படும்.

இதனிடையே, சுதேசி பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset