நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி

புது டெல்லி: 

ராஜஸ்தானில் கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று  கார் ஆற்றில் கவிந்து அடித்துச் செல்லப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

சித்தோர்கர் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பில்வாராவுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட பின்னர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் திரும்பி கொண்டிருந்தனர்.

வாகன ஓட்டுநர் கூகுள் மேப்பை பயன்படுத்திய நிலையில், அதில் மூடப்பட்ட தரைப்பாலம் வழியாக செல்ல வழிகாட்டப்பட்டுள்ளது.

அந்த வழியில் சென்றபோது ஆற்றில் அந்த வாகனம் சிக்கியது. அப்போது ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி கார் அடித்துச் செல்லப்பட்டது. காரில் இருந்த 3 பேர் உயரிழந்தனர்.

எனினும், வாகனத்தின் ஜன்னலை உடைத்து 5 பேர் தப்பித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset