நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி:

மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்துயும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா உள்பட 5 யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வர்த்தக ரீதியில் தெரிவிக்கப்படும் கருத்துகள் கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், நகைச்சுவை என்பது வாழ்வின் ஓர் பகுதி. ஆனால், அது மற்றவர்களை ஏளனம் செய்வதாக இருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நகைச்சுவைகளை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வணிக ரீதியிலான இதுபோன்ற பேச்சுக்கள், அடிப்படை பேச்சுரிமையின் கீழ் வராது.

இந்தச் செயலுக்காக 5 யூடியூபர்களும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டு, அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சியில் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset