நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்

புது டெல்லி: 

இந்தியாவில் காற்று மாசை குறைத்தால், அந்நாட்டில் வாழ்பவர்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் கூடுதலாக அதிகரிக்கலாம்  என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள மாசு அளவைவிட 8 மடங்கு அதிகமாக 2023-ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

இதை உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப குறைத்தால், இந்தியா்களின் சராசரி ஆயுள்காலத்தில் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்.

காற்று மாசுபாட்டை குறைந்தால், தலைநகா் தில்லி மக்கள் பெரும் பலனடைவார்கள். அவர்கள் 8.2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வார்கள்.

ராஜஸ்தானில் குறைத்தால் அந்த மக்கள் 3.3 ஆண்டுகளும் , மத்திய பிரதேச மக்கள் 3.1 ஆண்டுகளும், மகாராஷ்டிர மக்கள் 2.8 ஆண்டுகள் கூடுதல் ஆயுள் காலம் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset