நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகாம்புட் தொகுதி இந்தியர்களுக்கு மஇகா உரிய சேவைகளை வழங்கும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

சிகாம்புட் தொகுதியில் வாழும் இந்தியர்களுக்கு மஇகா உரிய சேவைகளை வழங்கும்.

மஇகா தேசிய பொருளாளரும் சிகாம்புட் தொகுதி தலைவருமான  டத்தோ சிவக்குமார் இதனை கூறினார்.

கடந்த காலங்களில் இந்த நாடாளுமன்ற தொகுதியில் எதிர்கட்சியினர் வெற்றி பெற்று வந்தனர்.

தற்போது ஒரு கூட்டணியில் உள்ள வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

எது எப்படி இருந்தாலும் இந்த தொகுதியில் வாழும் இந்தியர்களின் நலனில் மஇகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

வரும் ஆண்டுகளிலும் மக்களுக்கான சேவையை மஇகா தொடரும்.

சிகாம்புட் தொகுதி மஇகாவின் 31ஆவது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டத்தோ சிவக்குமார் இதனை கூறினார்.

தேசிய முன்னணி மஇகாவுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்: டத்தோ நெல்சன்

முன்னதாக இக்கூட்டத்தை மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

சிரமமான காலத்தில் தேசிய முன்னணியில் இருந்து வெளியேற போவதாக மிரட்ட வேண்டாம் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் கூறியிருந்தார்.

அவரின் இந்த அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது. தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் எண்ணம் மஇகாவுக்கு இல்லை.

ஆனால் அதற்காக தேசிய முன்னணி மஇகாவை அவமதிக்கக் கூடாது. உரிய மரியாதையை இக்கூட்டணி வழங்க வேண்டும்.

இதுவே எனது கோரிக்கை என்று டத்தோ நெல்சன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset