நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லோரிக்குள் சிக்கிய  ஓட்டுநர் உயிரிழந்தார்: காரில் பயணித்தவருக்கு கால் முறிந்தது

சிரம்பான்:

விபத்தில்  சிக்கிய லோரிக்குள் இருந்த ஓட்டுநர் உயிரிழந்த வேளையில் காரில் பயணித்தவருக்கு கால் முறிந்தது என்று தீயணைப்புப் படையின் செயல்பாட்டு பிரிவு மூத்த  அதிகாரி நிஜாம் யோம் கூறினார்.

இன்று மதியம் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் கிலோமீட்டர் 266.9 இல் இரண்டு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகின.

மதியம் 12.51 மணிக்கு இந்த சம்பவம் தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே சிரம்பான் 2, செனாவாங் தீயணைப்பு, மீட்பு நிலையங்களின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவ இடத்தில் 1 டன் எடையுள்ள லோரியும் பெரோடுவா அத்திவா காரும் மோதி விபத்துக்குள்ளாகின.

40 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.

அவர் அதே இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

பெரோடுவா அத்திவா ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை.

முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு கால் முறிந்ததாகவும் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு பெண் பயணிக்கு கை முறிந்ததாகவும் அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset