நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பேரணி வெற்றி: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அறிவிப்பு

புத்ராஜெயா:

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பேரணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஜூலை 26ஆம் தேதி அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் முகமது எஸ்ரி அப்துல் வஹாப் கூறினார்.

நீதித்துறையின் சுதந்திரத்தை  பாதுகாக்கும் முயற்சியில் மலேசிய வழக்கறிஞர் சங்கம் இன்று புத்ராஜெயாவில் பேரணியை நடத்தியது.

இதில் நாடு முழுவதிலுமிருந்து 1,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
  
பிரதமர் அலுவலகத்தில் எங்களின் கோரிக்கைகள் குறித்த மனுவை சமர்ப்பித்தோம். அதே வேளையில் வரும் ஜூலை 26ஆம் தேதி அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன் மூலம்  மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் நடத்திய பேரணி மகத்தான வெற்றியை கண்டுள்ளது.

மேலும் இந்த அணிவகுப்பு வழக்கறிஞர்களின் குரலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நீதித்துறையின் சுதந்திரம் பலவீனமாகும்போது, முழு தேசமும் அதன் விளைவுகளைச் சுமக்கிறது. 

இது தனிநபர்களைப் பற்றியது அல்ல, இது நிறுவனத்தையும் அரசியலமை சட்டத்தையும் அடிப்படைக் கொள்கைகளையும் பாதுகாப்பது பற்றியதாகும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset