நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 முதல் மின்சார பேருந்துகள்: Rapid Bus சேவையில் தொடங்கப்படும்

கோம்பாக்:
பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிர்வாகத்தில் இயங்கும் ரேப்பிட் பேருந்து (Rapid Bus) சேவையில், மின்சார பேருந்துகள் 2026ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட உள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

முந்தைய வர்த்தக ஒப்பந்த செயல்முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்துக்கு, மின்சார பேருந்துகளை 12 மாதங்களில் தயாரித்து ஒப்படைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதையும், அவர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக, மின்சார மையங்கள், சார்ஜிங் நிலையங்கள், மற்றும் பராமரிப்பு/தொழில்நுட்ப பயிற்சி வசதிகள் உருவாகி வருகின்றன என்று பத்து கேவ்ஸ்-ல் உள்ள ரேப்பிட் பேருந்து வளாகத்தில் புதிய டீசல் பேருந்துகள் அறிமுக விழாவில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

பிரசரானா நிறுவனத் தலைவர் அஸாருடின் மாட் சா மற்றும் போக்குவரத்துத் துறை செயல்தலைவர் ஜனசந்திரன் முனியாயன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டார்கள்.

மொத்தம் 310 புதிய டீசல் பேருந்துகள்.. இதில் 70 பேருந்துகள் பினாங்கில் இயக்கப்பட உள்ளன.

இவை அனைத்தும் இயற்கை எரிபொருள் (fossil fuel) மூலம் இயங்கும் கடைசி தொகுப்பு பேருந்துகளாக இருக்கும்.
அதன் பிறகு, முழுமையாக மின்சார பேருந்துகளுக்கே மாற்றம் மேற்கொள்ளப்படும்.

“மின்சார வாகன தொழில்நுட்பம் வெளிநாடுகளிலிருந்து வந்தாலும், மலேசியாவில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து இந்த மின்சார பேருந்துகள் இருப்பிடத் தயாரிப்பு (local assembly) மூலம் உருவாக்கப்பட வேண்டும்.”

“இதன் மூலம் உள்நாட்டு தொழில்துறைகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதோடு, பேருந்துத் தயாரிப்பு துறையும் மீண்டும் வளர்ச்சியடையும் என லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset