நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற லாரியின் காணொலி வைரல்

சிரம்பான்: 

சிரம்பான் Forest Heights பகுதியில், ஒரு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற காணொலி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் நுழைந்து, சாலையோரம் உள்ள மின் விளக்கு தூணை மோதிய சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.

எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 எம்பிவி ரக வாகனங்கள் அப்பகுதியைக் கடந்து சில விநாடிகளுக்குள்ளே,மின் விளக்கு தூண் தரையில் விழுந்து அதிலிருந்து தீப்பொறிகள் வெளியாகின. 

அது மட்டுமல்லாமல், இரு MPV வாகன ஓட்டுநர்களும் துரிதமாக செயல்பட்டதால் விபத்தைத் தவிர்க்க முடிந்தது என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். 

ஒரு விநாடி தாமதமாகியிருந்தால் 2 எம்பிவி ரக வாகனங்கள் மீது லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்திருக்க கூடும் என்று பயனர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset