நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்தனர்

உலு லங்காட்:

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்தனர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.

உலு சிலாங்கூர் புக்கிட் செந்தோசா ஜாலான் துலிப் 3இல் இந்த விபத்து நிகழ்ந்தது.

காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 38 வயது பெண்ணும் அவரது ஒன்பது வயது மகளும் காயமடைந்தனர்.

அவசர அழைப்பு வந்தவுடன் தீயணைப்பு,  மீட்பு நிலையத்திலிருந்து எட்டு பேர் கொண்ட குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தது.

விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் லேசான காயமடைந்தனர்.

அதே நேரத்தில் 57 வயது பேருந்து ஓட்டுநர், 17 வயது சிறுவன் ஒருவருக்கு காயம் ஏற்படவில்லை.

காயமடைந்தவர்கள் கோலா குபு பாரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset