நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறைந்த கட்டணச் சேவையே கேடிஎம் லாபம் ஈட்டாததற்குக் காரணம்: அந்தோனி லோக் 

கோம்பாக்:

அரசாங்கத்தின் மானியங்களைத் தொடர்ந்து குறைந்த கட்டணச் சேவைகளால் கேடிஎம் ரயில் நிறுவனம் லாபம் ஈட்ட இயலவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

கேடிஎம் ரயில் சேவைகளின் டிக்கெட் விலைகளை அதிகரித்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும்.

ஆனால் தற்போது இந்நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

கேடிஎம் ரயில் நிறுவனம் அரசாங்கத்திற்கு உட்பட்ட நிறுவனம் என்பதால் லாபப் பிரச்சனை பெரிய சிக்கலாகப் பார்க்கப்படவில்லை என்று என்று பத்துமலை பேருந்து வளாகத்தில் புதிய டீசல் பேருந்து அறிமுக விழாவிற்குப் பிறகு அவர் இதனைக் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், கம்யூட்டர் சேவையைத் தவிர்த்துச் சரக்கு சேவை, மின்சார ரயில் பயணங்கள் ஆகியவை லாபத்தைப் பதிவு செய்ததாக அந்தோனி லோக் சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset