நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கவே பேரணியில் கலந்து கொண்டேன்: நூருல் இசா

புத்ராஜெயா:

நாட்டின் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கவே பேரணியில் கலந்து கொண்டேன்.

கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் இதனை கூறினார்.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் முழு ஆதரவை வழங்குகிறார்.

இதன் அடிப்படையில்தான் இன்றைய மலேசிய வழக்கறிஞர் சங்கம் ஏற்பாடு செய்த பேரணியில் கலந்து கொண்டேன்.

கெஅடிலான் போராட்டத்தின் அடிப்படையான சீர்திருத்தம், நீதியின் உணர்வில், அரசாங்கம் தற்போதுள்ள கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

இதனால் வெளிப்படையானதாகவும் பொறுப்புணர்வுடனும் இருக்க முடியும் என்று நூருல் இசா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset