நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர்

புது டெல்லி: 

நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம் உள்பட இந்திய சிறுபான்மையினரின் வாக்குகளை பாஜக நீக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பிஹார் இன்னும் சில மாதங்களில் நடைபெறும்  தேர்தலை முன்னிட்டுவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிஹாரில் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரியிலும் இதுபோன்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு  தீவிர திருத்தப் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset