நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்

லக்னோ:

இந்தியாவில் ஓர் ஆடவர் கொஞ்சமும் பயமில்லாமல் ஆள் உயர ராஜ நாகத்தைக் கையில் ஏந்தியவாறு நிற்கும் காணொலி பகிரப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரி பர்வீன் கஸ்வான் அந்த 11 நிமிடக் காணொலியைப் பதிவிட்டுள்ளார்.

ராஜ நாகத்தின் உண்மையான அளவு என்ன? இந்தியாவின் அதை எங்கு காணலாம்? ராஜ நாகத்தைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்? முதலிய கேள்விகளையும் அந்த அதிகாரி காணொலியில் பதிவேற்றியிருக்கிறார்.

அதைப் பார்த்த இணைவாசிகள் பயத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

"ராஜ நாகத்தை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அது சீறும் சத்தம் இன்னும் நினைவிருக்கிறது. அந்த இரவு தூங்கவே இல்லை" என்று ஒருவர் கூறியுள்ளார்.

"நானும் ஒருமுறை பார்த்துள்ளேன். தூரமாகச் சென்று விடுவது நல்லது" என்று மற்றொருவர் கூறினார்.

ராஜநாகம் உலகின் மிக நீளமான பாம்பாகக் கருதப்படுகிறது. அதன் நீளம் 5.5 மீட்டர் வரை இருக்கும் இந்தியா உட்பட தென்கிழக்காசிய காடுகளில் அது காணப்படும்.

ஆதாரம்: Hidustan Times

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset