செய்திகள் மலேசியா
மாமன்னரின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம்; அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
கோலாலம்பூர்:
மாமன்னரின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை விசாரிக்க உடனடியாக அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதை மலேசிய மக்கள் சக்தி கட்சி கடுமையாக கருதுகிறது.
இது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்கும் உத்தரவாகும்.
அரசியலமைப்பின் அடிப்படையில் மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால், இந்தப் பிரச்சினையை அரசியல் விவாதமாக மாற்றக்கூடாது.
ஆனால் மாமன்னரின் ஒவ்வொரு உத்தரவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும்.
கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 38இன் கீழ் நாட்டின் ஜனநாயகத்தின் மையமாக மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை வழங்குகிறது.
எனவே மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு உத்தரவையும், தாமதம், அரசியல் தலையீடு அல்லது நிர்வாக சூழ்ச்சி இல்லாமல் மதித்து செயல்படுத்த வேண்டும்.
மேலும் இந்த கூடுதல் உத்தரவை செயல்படுத்துவதில் ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகாரிகள் குறிப்பாக சட்டத்துறை தலைவர் பொறுப்பு, பணி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
அரசாங்கத்தின் முக்கிய சட்ட ஆலோசகராக விளங்கும் சட்டத்துறை தலைவர் முன்கூட்டியே செயல்பட்டு உத்தரவை செயல்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். அதை தாமதப்படுத்தக்கூடாது.
இந்த வழக்கு சிவில் வழக்கு, குற்றவியல் வழக்கு அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்.
எனவே, நியாயமான, மனிதாபிமான, சட்டம் சார்ந்த அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் கீழ் ஒரு குடிமகனாக டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
கூடுதல் உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும்.
ஆணையின் சட்டப்பூர்வ நிலையை வெளிப்படையாகவும் நியாயமாகவும் மதிப்பிடவும் முடிவெடுக்கவும் உயர் நீதிமன்றத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ உத்தரவை கையாள்வதில் உள்ள அனைத்து வகையான தாமதம், அலட்சியம், இணங்காததை விசாரிக்க ஒரு அரச விசாரணை ஆணையம் நிறுவப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:57 am
உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா-ஸ்லோவாக்கியா நட்புறவு: டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன்
April 30, 2026, 11:06 am
கெப்போங்கில் அதிகாலை நேர்ந்த தீ விபத்து: 53 வயது நபர் படுக்கையிலேயே கருகி பலி
April 30, 2026, 10:28 am
தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது
April 30, 2026, 10:16 am
நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை
April 30, 2026, 10:07 am
கடன் தகராறு: மாணவன் மீது கொடூரத் தாக்குதல்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:43 am
