செய்திகள் இந்தியா
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கடந்த 9-ம் தேதி நள்ளிரவு நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது சொகுசு கார் பாய்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சொகுசு காரை இயக்கிய ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
நள்ளிரவு 1.45 மணி அளவில் வசந்த் விஹாரின் ஷிவா கேம்ப் பகுதியில் உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது Audi சொகுசு கார் பாய்ந்தது. இதில் 8 வயது சிறுமி உட்பட நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேரும் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வசந்த் விஹார் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் அங்கு இருந்தவர்கள் காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸாரிடம் நடந்ததை சொல்லி உள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொகுசு காரை இயக்கியது டெல்லியின் துவாரகாவை சேர்ந்த 40 வயதான உட்சவ் சேகர் என்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மது போதையில் காரை இயக்கியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
August 13, 2026, 5:18 pm
அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வரும் சீனா
August 12, 2026, 6:04 pm
அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டது: ராகுல் கிண்டல்
August 12, 2026, 5:58 pm
இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
