நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய திருப்பணியில் சிசிடிவி பொருத்தும் திட்டம் இல்லையென்றால் பேரா அரசு மானியம் வழங்காது: சிவநேசன்

மஞ்சோங்:

ஆலய திருப்பணியில் சிசிடிவி பொருத்தும் திட்டம் இல்லையென்றால் பேரா மாநில அரசு மானியம் வழங்காது.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் இதனை கூறினார்.

ஆலய கும்பாபிஷேகம், திருவிழாக்களின் போது தாலிக் கொடி திருடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இதே போன்று ஆலயங்களில் பல்வேறான பிரச்சினைகள் நிலவி வருகின்றன.

இதற்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் ஆலயங்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக ஆலயங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.

ஆக வரும் காலங்களில் திருப்பணிக்கு ஆலயங்கள் மானியம் கோரும்.

அப்படி இத்திருப்பணியில் சிசிடிவி பொருத்தும் திட்டம் இல்லை என்றால் கண்டிப்பாக மாநில அரசு மானியம் கொடுக்காது.

ஆக ஆலய நிர்வாகங்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிவநேசன் கூறினார்.

முன்னதாக  பேரா, மஞ்சோங் மாவட்டத்தில் கம்போங் டத்தோஸ்ரீ கமாருடின் எனும் இடத்தில் 30 லட்சம் ரிங்கிட் செலவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

இவ்விழாவைக்கான பெரும் திரளான பக்தர்கள் திரண்டனர்.

இந்த வட்டாரத்தில் பெரும் பிரசித்திப்பெற்ற இந்த ஆலய திருப்பணி் மற்றும் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற அரசாங்கம் பொது மக்கள் பேராதவு வழங்கியதாக அதன் ஆலய. கட்டடக் குழுத் தலைவர் சத்தியசிவம் ராசையா கூறினார்.

இவ்விழாவிற்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் சிறப்பு வருகை புரிந்தார் இந்த ஆலயத்திற்கு மேலும் 40 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்த ஆலயத்திற்கு இதற்கு முன்பு 110,000 ரிங்கிட் வழங்கியதை அவர் நினைவுக் கூர்ந்தார்.

- பாரத்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset