
செய்திகள் மலேசியா
சுங்கை சிப்புட் பள்ளிவாசலில் சமய நல்லிணக்கத்துடன் ஆஷூரா கஞ்சி வழங்கப்பட்டது
சுங்கை சிப்புட்:
சுங்கை சிப்புட் பள்ளிவாசலில் சமய நல்லிணக்கத்துடன் ஆஷூரா கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தான தர்மங்களும், நல்ல அமல்களும், நோன்பு வைப்பதும், இஸ்லாமிய மார்க்கத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஆஷூரா உடைய நாளிலே நோன்பு நோற்பதோடு ஏழைகளுக்கு உணவு வழங்குவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
ஆகவே தமிழ் பேசுகிற முஸ்லிம்கள் இன்னும் பல பகுதிகளில் உள்ள மக்கள் ஆஷூரா கஞ்சி விநியோக நிகழ்வை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த நிகழ்வு சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகம் ஆண்டு தோறும் நடத்தி வருவதாக அதன் செயலாளர் ஜமாலுடின் அலி கூறினார்.
இந்த நிகழ்வு ஆண்டு தோறும் அனைத்து சமூக இயகங்களுடன் இணைந்து நடத்தி வருவதாகவும் அதன் முதன்மை நோக்கம் சமய நல்லிணக்கத்திற்காக செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
ஆஷூரா என்றாலே ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் 10ஆம் நாளைக் குறிக்கிறது. பத்து விதமான தானியங்களை கொண்டு கஞ்சி காய்ச்சி ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது.
அதனுடைய முக்கிய நோக்கம் சமுக ஒற்றுமையும், ஏழைகளுக்கு அதை கொடுத்து அன்பையும், பாசத்தையும், குடும்பங்களுக்கு மத்தியில் பரிமாறிக் கொள்வதாக கருதப்படுவதாக சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலின் இமாம் அல் ஹபிஸ் கூறினார்.
ஆஷூரா என்று சொன்னாலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தில் பிரபல்யமாக முஹர்ரம் மாதத்தின் வரலாற்று சிறப்புமிக்க பத்தாவது நாளை அது குறிக்கிறது.
இங்கு சுங்கை சிப்புட்டில் நடத்தப்படும் ஆஷூரா நிகழ்வில் இந்து, முஸ்லிம் மற்றும் சீன சமயங்களைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 4:23 pm
துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm