நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தாப்பா:

ஆயிர் கூனிங் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தாப்பா ஆயிர் கூனிங் தேவிஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நீண்டக் கால வரலாற்றை கொண்ட ஆலயமாகும்.

இவ்வாலயத்தில் திருப்பணிகள் வெற்றிகரமாக நடந்து இன்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

அதன் பின் புனித கும்ப நீா் ஆலய கலசங்களுக்கு ஏற்றப்பட்டது.

இதில் திரளான மெய்யன்பர்கள் கலந்துக் கொண்டு சுவாமியின் திருவருட்கடாட்சம் பெற்றனர். 

குறிப்பாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

ஆலய கும்பாபிஷேகத்திற்கு பின் அங்கு கூடியிருந்த மக்களையும் அவர் சந்தித்து பேசினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset