செய்திகள் மலேசியா
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
சிங்கப்பூர்:
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சாங்கி விமான நிலையத்திலும் கரையோரப் பூந்தோட்டத்திலும் பிடிபட்டதாக சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
தகுந்த உரிமம் வைத்திருக்காத ஓட்டுநர்களுக்கு 3,000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதமோ 6 மாதச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இந்நிலையில் பயணிகள் சட்டவிரோத வாகனச் சேவையைப் பயன்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தகைய சேவைகளை வழங்குவோர் தகுந்த உரிமமோ காப்புறுதியோ வைத்திருக்கமாட்டார்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:01 pm
வரலாற்றின் கறுப்புப் பக்கமான மே 13: பன்முகத்தன்மையே நாட்டின் பலம்
May 13, 2026, 11:50 am
இந்து ஆலய விவகாரத்தில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்: பிரதமருக்கு குணராஜ் ஆதரவு
May 13, 2026, 11:49 am
லெபனானில் ட்ரோன் வெடித்ததில் மலேசிய ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை: காலிட் நோர்டின்
May 13, 2026, 11:46 am
ஜோ லோ, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது
May 13, 2026, 10:08 am
வாகனம் மோதி வடிகாலில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
May 12, 2026, 4:47 pm
