நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்

புத்ராஜெயா:

நீதித்துறையை சுதந்திர பேரணியால் புத்ராஜெயாவில் போலிசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

கோலாலம்பூர் துணை போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசுப் ஜான் முகமது இதனை கூறினார்.

புத்ராஜெயாவில் திங்கட்கிழமை நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பேரணி  நடைபெறவுள்ளது.

இந்த பேரணியை ஏற்பாடு செய்வது தொடர்பாக மலேசிய வழக்கறிஞர் சங்கத்திடமிருந்து விண்ணப்பம் பெற்றுள்ளதாக போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விண்ணப்பம் கடந்த புதன்கிழமை புத்ராஜெயா மாவட்ட போலிஸ் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

போலிசார் ஏற்பாட்டாளர்களைச் சந்தித்து, அமைதியான ஒன்றுகூடல் சட்டம் 2012 இன் கீழ் எந்தவொரு விதிமுறைகளையும் அல்லது குற்றங்களையும் மீற வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset