செய்திகள் உலகம்
அமெரிக்கா விசா பெறும் வரை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட மாட்டார்கள்; அதன்பின்பும் உன்னிப்பாக கவனிக்கப்படுவார்கள்: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க நாட்டிற்குள் வருபவர்கள், அங்கு இருப்பவர்களை மிகவும் அந்த நாட்டு அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்கள், இனி குடியேறப் போகிறவர்கள் என எவரும் அரசிற்கு எதிராக பேசக் கூடாது... நடக்கக் கூடாது என்பதில் அமெரிக்க அரசு தெளிவாக உள்ளது.
இதனால் தான், அமெரிக்கா செல்ல விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, அவர்களது சமூக வலைதள பக்கங்களின் தகவல்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதன் மூலம், அவர்கள் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துகளை கொண்டவர்களா என்பது ஆய்வு செய்யப்படும்.
இன்று அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,
"அமெரிக்கா விசா பெறும் வரை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட மாட்டார்கள். அதன் பின்னும், கண்காணிக்கப்படுவார்கள்.
அவர்கள் அமெரிக்காவின் சட்டம் மற்றும் குடியேற்ற விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
ஒருவேளை, அவர்கள் அதை மீறினால், அவர்களது விசா ரத்து செய்யப்பட்டு, உடனடியாக, சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அரசு அமெரிக்காவில் குடியேறியவர்கள், குடியேறுபவர்களின் விஷயத்தில் மிகவும் கவனமாக உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
20வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிரிட்டிஷ் சாகச வீரர்
May 22, 2026, 11:04 pm
