செய்திகள் இந்தியா
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
மும்பை:
எம்எல்ஏ கேன்டீனில் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட ஆளும் சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது முதல்வர் பட்னவீஸ் கூறியபின் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
எம்எல்ஏக்கள் காண்டீனில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக கூறி சிவ சேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் ஊழியரின் கன்னத்தில் அறைந்து குத்துவிட்டு தாக்கினார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இதையடுத்து அரசியல் கட்சியினர் பலர், சிவசேனா எம்எல்ஏ கெய்க்வாட்டின் செயலை கண்டித்தனர்.
கெய்க்வாட் மீது யாரும் புகார் கொடுக்காததால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க முடியாது என மாநில உள்துறை இணையமைச்சர் யோகேஷ் கடம் கூறினார்.
இதையடுத்து இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பிய பின்னர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், கேன்டீன் ஊழியரை எம்எல்ஏ தாக்கியது அதிகார துஷ்பிரயோகம். புகார் கொடுத்தால்தான் விசாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
போலீஸார் தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என்றார்.
இதையடுத்து கெய்க்வாட் மீது மும்பை கடற்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு முன்பே அந்த கேட்டீனுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 2:09 pm
ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 37 இந்திய கப்பல்கள்
March 3, 2026, 12:27 am
ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு இந்திய அரசு உத்தரவு
February 26, 2026, 4:34 pm
இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்
February 26, 2026, 3:00 pm
அனில் அம்பானியின் நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி: ரூ.3,716 கோடி மதிப்பிலான பங்களாவை முடக்கியது அமலாக்கத்துறை
February 26, 2026, 1:40 pm
இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
February 26, 2026, 11:40 am
