நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்

கொழும்பு: 

இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டின் தமிழ்க் கட்சி வலியுறுத்தியது.

இலங்கையில் விடுதலைப்புலி போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே 2009இல் இறுதிப் போர் நடைபெற்றது.

இதில் 22,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 6,200 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இறுதிப் போரின்போது ராணுவத்திடம் சரணடைந்த வடக்கு மாகாண இலங்கைத் தமிழர் குடும்பத்தினர் காணாமல் போனதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், வடக்கு யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அண்மையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஏராளமான மனித எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மனிதப் புதைகுழி தொடர்பான உண்மையை வெளிப்படுத்த இலங்கை அரசை இலங்கை தமிழ் அரசு கட்சி (ஐடிஏகே) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதிபர்  திசாநாயகவுக்கு அக் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset