நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு

புது டெல்லி: 

75 வயதை எட்டியவுடன் மோடி தனது பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று பாஜகவின் மத அமைப்பான ஆர்எஸ்எஸ் சூசகமாக தெரிவித்துள்ளது.

75 வயதை நிறைவு செய்தவர்கள் பதவி விலகி மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை வகிக்கும் மோடி  வரும் செப்டம்பர் 17ம் தேதி 75 வயதை பூர்த்தி செய்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்  எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 5 நாடுகள் பயணம் முடித்து பிரதமர் மோடி நாடு திரும்பிய நிலையில், அவர் வரும் செப்டம்பர் 17ம் தேதி 75 வயதை எட்டுகிறார் என்பதை மோகன் பாகவத் நினைவூட்டியுள்ளார்.

இதுபோல, அதே செப்டம்பர் 11ம் தேதி மோகன் பாகவத் 75 வயதை பூர்த்தி செய்ய உள்ளதை, பிரதமர் மோடியும் அவருக்கு சுட்டிக்காட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset