
செய்திகள் இந்தியா
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
தாணே:
மஹாராஷ்டிராவின் தாணே மாவட்ட பள்ளியில் மாணவிகளை ஆடைகளை களைந்து சோதனையிட்டதாக பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சஹாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி கழிப்பறையில், கடந்த 8ம் தேதி ஆங்காங்கே ரத்தத் துளிகள் தென்பட்டன.
இதைஅறிந்த பள்ளி முதல்வர், ஐந்து முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியரை பள்ளி கூட்டரங்கத்துக்கு அழைத்தார்.
கழிப்பறையில் தென்பட்ட ரத்த துளிகளை, வீடியோ எடுத்து, மாணவியருக்கு போட்டு காட்டியுள்ளார். மேலும், மாதவிடாய் உள்ளவர்களை சோதனையிட பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவியரை கழிப்பறைக்கு அழைத்து சென்ற பெண் உதவியாளர், ஆடைகளை மற்றும் உள்ளாடைகளை அவிழ்த்து சோதனையிட்டார்.
இது குறித்து பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் டுபட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளி முதல்வர், நான்கு ஆசிரியைகள், உதவியாளர் உட்பட எட்டு பேர் மீது, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பள்ளி முதல்வர், பெண் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
August 27, 2025, 5:48 pm
மும்பையில் கோலாகலமாக தொடங்கிய விநாயகர் விழா; பாதுகாப்பு பணியில் 17000 போலீஸார்
August 27, 2025, 4:11 pm
இந்தியா பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி அமலாகியது
August 27, 2025, 3:39 pm
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
August 27, 2025, 1:52 pm