
செய்திகள் இந்தியா
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
புதுடெல்லி:
கடந்த ஓரு வாரமாக 5 நாடுகளுக்கு பயணத்தை முடித்துவிட்டு தில்லி திரும்பிய மோடிக்கு உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு எப்போது செல்லார் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக சமூக வலை தளத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஸ் வெளியிட்ட பதிவில்,
அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பல்வேறு வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பி உள்ளார். அவரை இந்தியா வரவேற்கிறது.
கலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மாநிலம், கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியிருக்கும் அவர் இப்போதாவது சிறிது நேரம் ஒதுக்கி மணிப்பூர் செல்வாரா?
பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் இயற்கை சீற்றத்தால் சீர்குலைந்திருக்கிறது.
இமாச்சல பிரதேசம் பெருவெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களின் நிவாரணப் பணிகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்துவாரா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
August 27, 2025, 5:48 pm
மும்பையில் கோலாகலமாக தொடங்கிய விநாயகர் விழா; பாதுகாப்பு பணியில் 17000 போலீஸார்
August 27, 2025, 4:11 pm
இந்தியா பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி அமலாகியது
August 27, 2025, 3:39 pm
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
August 27, 2025, 1:52 pm