நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ பெர்டானாவில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு

புத்ராஜெயா:

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பு புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானாவில் நடைபெறுகிறது.

தேசிய முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் பல இன்றிரவு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்குள் நுழைந்தன.

பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலித் நோர்டினின் கார் ராணுவ போலிசாருடன் சேர்ந்து, 

இன்று இரவு 7.20 மணியளவில் ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிந்தது.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி  சென்ற வாகனம் இரவு 7.40 மணியளவில் ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்குள் நுழைந்தது.

இதன் மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இரவு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டத்தை நடத்துகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset