நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்

பாலேக் பூலாவ்:

கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

பாலிக் பூலாவ் நீதிமன்றத்தில் தனது கணவரை மூங்கில் பிரம்பால் அடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார்.

கடந்த ஜூலை 4ஆம் தேதி காலை 11 மணியளவில் தாமான் எமாஸ் தெலுக் கும்பாரில் உள்ள ஒரு வீட்டின் முன் தனது கணவர் முகமது நசீர் அப்துல் ஹலீம் (48) மீது இந்தச் செயலைச் செய்ததாக 37 வயதான யாங் கலிதா காலித் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டின்படி குற்றம் சாட்டப்பட்டவர் கோபத்தில் தனது கணவரின் தலை, கைகளில் மூங்கில் பிரம்பால் தாக்கி காயப்படுத்தினார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 334 இன் கீழ் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட்  வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வழக்கு விசாரணையின் போது துணை அரசு வழக்கறிஞர் ஆர். லுஷானி, ஒரு பாடமாகவும், உதாரணமாகவும் பொருத்தமான தண்டனையை நீதிமன்றம் வழங்குமாறு கோரினார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாகப் பேசிய தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் வழக்கறிஞர் யீவ் டி சியான்,

குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது கணவரும் இன்னும் விவாகரத்து செய்யும் பணியில் இருந்தாலும் அவர் மாதம் 2,000 ரிங்கிட்டை சம்பாதித்து தனது தாயாரை பாதுகாத்து வருகிறார்.

ஆகையால் தனது கட்சிக்காரருக்கு எதிராக குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு கோரினார்.

இதன் அடிப்படையில் நீதிபதி மாஜிஸ்திரேட் சியா ஹுய் டிங் அவருக்கு 150 ரிங்கிட் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தவில்லை என்றால் மூன்று நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் அபராதத்தை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset