நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரிகள் அமெரிக்காவை மூழ்கடிக்காது; ஆசியானையும் ஓரங்கட்டாது: ரூபியோ

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் சொந்த நாட்டையே மூழ்கடிக்காது.

ஆசியானையும் ஓரங்கட்டாது என்று  வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.

எண்களை நேர்மறையான வழியில் மாற்றும் நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தங்களை எட்டக்கூடும்.

அதைச் சரிசெய்ய சிறிது நேரமும் காலமும் ஆகும். ஆனால் அதைச் செய்ய முடியும்.

இருப்பினும், பொதுவாக, இது எந்த நாட்டையும் குறிவைக்கவில்லை.

இன்று கோலாலம்பூரில் நடந்த 58ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், தொடர்புடைய கூட்டங்களுக்கு இடையே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா எதிர்கொள்ளும் பெரிய வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தேவையான நடவடிக்கையாக வரிகள் உள்ளது.

இது உலகளாவிய இயல்புடையது. இது உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும்.

காரணம் பல நாடுகளுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை நீடிக்க முடியாதது. நாம் அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset