நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்

கோலாலம்பூர்:

துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை.

தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் இக்கேள்வியை எழுப்பினார்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் 100ஆவது வயதை எட்டியுள்ளார்.

அவரின் பிறந்தநாளை கொண்டாட அரசாங்கம் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளை ஏன் நடத்தவில்லை என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

அரசாங்கத் தலைவர்களின் தனிப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள் மட்டும் போதாது.

ஒரு அரசியல்வாதிக்கு இவ்வளவு அர்த்தமுள்ள தேதியைக் கொண்டாட அரசு ஏற்பாடு செய்த அதிகாரப்பூர்வ நிகழ்வு ஏன் இல்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அரசாங்கத் தலைவர்களின் தனிப்பட்ட உரைகள் மட்டுமே கிடைக்கின்றன. எனக்கு இது போதாது.

நண்பராக இருந்தாலும் சரி, எதிரியாக இருந்தாலும் சரி, துன் மகாதிர் ஒரு அரசியல்வாதி என்பதை யாரும் மறுக்க முடியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset