
செய்திகள் மலேசியா
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
கோலாலம்பூர்:
நாட்டின் மக்கள் தொகை வரும் ஆண்டுகளில் சீராக வளர்ச்சியடையலாம் என்று தேசிய புள்ளியல் துறை கணித்துள்ளது.
2020ஆம் ஆண்டு தரவுகள்படி நாட்டின் மக்கள் தொகை 32.45 மில்லியனாகவுள்ளது.
இந்த எண்ணிக்கை 2060ஆண்டு 42.37ஆக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய புள்ளியல்துறை தெரிவித்தது.
தேசிய புள்ளியல் துறையின் தரவுபடி 2030-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் மக்கள்தொகை 36.49 மில்லியனாக உயரலாம்.
அதேபோல் 2040-ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 39.78 மில்லியனாக மாறக்கூடும்.
2050-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 41.79 மில்லியனாகக் கூடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தரவுகள்படி மலாய் சமூகத்தினர் எண்ணிக்கை 2060ஆம் ஆண்டு 79.4 விழுக்காடாக உயரக்கூடும். 2030ஆம் ஆண்டு அது 71.8 விழுக்காடாக இருக்கும்.
அதேபோல் சீன சமூகத்தினர் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 21.1 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் 2060-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 14.8 விழுக்காடாகச் சரியும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் இந்தியச் சமூகத்தினரின் மக்கள் தொகையும் சரிவைச் சந்திக்கும்.
2030-ஆம் ஆண்டில் 4.7 விழுக்காடாக இருக்கும் அது 2060-ஆம் ஆண்டில் 4.7 விழுக்காடாகக் குறையும் என்று தேசிய புள்ளியல்துறை தெரிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 9:27 pm
ஸ்ரீ பெர்டானாவில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு
July 11, 2025, 8:32 pm
82,637 சுகாதார ஊழியர்களுக்கு ஷிப்ட் வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: ஜேபிஏ
July 11, 2025, 8:29 pm
வரிகள் அமெரிக்காவை மூழ்கடிக்காது; ஆசியானையும் ஓரங்கட்டாது: ரூபியோ
July 11, 2025, 8:25 pm
ஹெலிகாப்டர் விபத்து: தேவேந்திரனின் நுரையீரல் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளது
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 4:19 pm