நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோவின் கருத்துக்களை மதிக்கிறேன்; ஆனால் அது நீதிமன்றத்தைப் பொறுத்தது: பிரதமர்

புத்ராஜெயா:

கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோவின் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் அது நீதிமன்றத்தைப் பொறுத்தது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட  கூடுதல் உத்தரவை சட்டத்துறை தலைவர் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும் என அம்னோ வலியுறுத்தியுள்ளது.

அம்னோவின் இந்த  கருத்துக்களைமுழுமையாக மதிக்கிறேன். ஆனால்  இந்த விவகாரம் இன்னும் நீதிமன்ற மட்டத்தில் உள்ளது.

ஆக அனைத்து தரப்பினரும் முறையான செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்று  பிரதமர் வலியுறுத்தினார்.

கூடுதல் உத்தரவு இப்போது நீதிமன்றத்தின் விஷயம். எனவே எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கிறோம்.ஆனால் நாங்கள் செயல்முறையைப் பின்பற்றுகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset