நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹெலிகாப்டர் விபத்து: தேவேந்திரனின் நுரையீரல் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளது

ஜொகூர்பாரு:

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய போலிஸ் அதிகாரி ஆர்.ஜி. தேவேந்திரனின் நுரையீரல் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

அவரின் சகோதரர் ஆர்.ஜி. நவீந்திரன் இதை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

போலிஸ்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நீரில் மூழ்கும்போது உடலில் தண்ணீர் நுழைவதால் ஏற்படும் கிருமிகளால் தேவேந்திரனின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் இன்னும் சுல்தானா அமினா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது நுரையீரலில் பாக்டீரியா தொற்று காரணமாக அவர் இன்னும்  மயக்க நிலையில் இருப்பதாக  மருத்துவர் எனக்குத் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று தஞ்சோங் குபாங் போலிஸ் நிலையத் தலைவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்த பிறகு எனக்கு இந்தச் செய்தி கிடைத்தது.

நான் அதிர்ச்சியடைந்தேன். என் இளைய சகோதரருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 

தேவேந்திரன் உண்மையில் ஒரு போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார். 

அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக மட்டுமே பணியாற்றி வருகிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset