நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

82,637 சுகாதார ஊழியர்களுக்கு ஷிப்ட் வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: ஜேபிஏ

புத்ராஜெயா:

நாட்டில் 82,637 சுகாதார ஊழியர்களுக்கு ஷிப்ட் வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜேபிஏ எனப்படும் பொது சேவைகள் துறை ஓர் அறிக்கையின் வாயிலாக இதை தெரிவித்தது.

சுகாதார அமைச்சின்  ஐந்து முக்கியமான சேவைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை வாரத்திற்கு 42 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஷிப்ட் வேலையில் இருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

தாதியர்கள், சமூக தாதியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவ அதிகாரிகள், உதவி மருத்துவ அதிகாரிகள், சுகாதார உதவியாளர்கள் உட்பட மொத்தம் 82,637 சுகாதாரப் பணியாளர்கள் இந்த விலக்கில் உள்ளனர்.

பொது சேவை ஊதிய முறையின் கீழ் 45 மணி நேர வாராந்திர ஷிப்ட் பணியை செயல்படுத்துவது தொடர்பாக சுகாதாரப் பணியாளர்கள் எழுப்பும் கவலைகளை அரசாங்கம் அறிந்திருக்கிறது.

இதன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset